அரசியலுக்க வந்துவிட்டதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் சட்டம் ஒழுங்கு, காவிரி விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், இன்று இமயலை புறப்பட்டார்தமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன் எனக்கூறிய நடிகர் ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்காக, மாவட்ட வாரியாக, பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ள ரஜினி, ‘எம்.ஜி.ஆர்., ஆட்சியை தருவேன்’ என, அதிரடியாக அறிவித்து இருக்கிறார். .
இந்நிலையில், இன்று இமயமலைக்கு புறப்படுகிறார். விமானம் வாயிலாக, சிம்லா செல்லும் ரஜினி, அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் மற்றும் பாபா குகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். குகையில், தன் குரு பாபா மற்றும் ஆன்மிக குருக்களிடம் ஆசி பெற இருக்கிறார்.