கிளிநொச்சி பரந்தன் முறிகண்டி தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.
நேற்று பரந்தனில் தனியார் பேருந்து நடத்துனர் இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும் பொலிஸாரினால் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதனைக் கண்டித்தும் தாக்குதலுக்கு எதிர்புத் தெரிவித்துமே பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.