பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தை ஒரு லட்சம் ரூபா பணத்துக்காக விற்பனை செயப்பட்டதாகக் குற்றஞ்சாட் டப்படு கின்றது. வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவரால் பெற்றெடுக்கப்பட்ட இந்தக் குழந்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. குழந்தை ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. குழந்தையை வாங்கியவர் பின்னர் அதை ஒரு லட்சம் ரூபாவுக்கு வேறொருவருக்கு விற்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குழந்தையின் தாயும், குழந்தையை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெண்ணும் பொலிஸாரிடம் நேற்றுமுன்தினம் சிக்கியுள்ளனர். குழந்தையும் மீட்கப்பட்டது.
சம்பவத்தை உறுதிப்படுத்திய வவுனி்யாப் பொலிஸார் தாம் எவரையும் கைது செய்யவில்லை யாழ்ப்பாணப் பொலிஸாரே இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர் என்றனர். யாழ்ப்பாணப் பொலிஸாரும் சம்பவத்தை உறுப்படுத்தினர். எனினும் தாம் எவரையும் கைது செய்யவில்லை என்றனர்.