மன்னார் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கும் நேற்று வெள்ளிக் கிழமை முதல் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கண்டியில் முஸ்லிம் களுக்கு எதிராக வெடித்த இனக் கலவரத்தையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கில் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு நேற்றுமுன்தினம் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கும் நேற்று முதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நேற்றுத் தொழுகையின் பின்னர் போராட்டங்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக பொலிஸ் சுற்றுக்காவலும் அதிகரிக்கப்பட்டிருந்தது. தொழுகையின் பின்னர் வீதிகளில் மக்களைக் கூட்டமாக நிற்கவேண்டாம் என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது.