முஸ்லிம்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டாத வண்ணமும் இன்றைய குத்பாப் பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வாக் குழு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இதனைக் கேட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறும் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளதால் ஜும்ஆ முடிந்தவுடன் சட்டத்தை மதித்து அமைதியாக கலைந்து செல்லுமாறும் முஸ்லிம்களை உலமா சபை கேட்டுள்ளது.

