Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபாகரன் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது : முஸ்லிம்மக்கள்

March 6, 2018
in News, Politics, Uncategorized, World
0
பிரபாகரன் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது : முஸ்லிம்மக்கள்

2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் அரசியல் தளம் எப்போது பலவீனம் அடைகிறதோ, அப்போது நாட்டின் வன்முறைகள் வலுப்பெறுவது இலங்கையின் வரலாற்றில் மாற்றம் இல்லாத ஒரு நிகழ்வாக பதிவாகி உள்ளது. இரு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து மூன்றாண்டுகள் வெற்றிகரமாக பயணித்துள்ள நிலையில், அடுத்தாண்டுக்குள் செல்வதில் பல புடுக்குபாடுகள் உள்ளக ரீதியாக ஏற்பட்டுள்ளது. சமகால அரசாங்கம் ஆட்சியில் இருக்குமா? இரு பெரும் கட்சிகளில் யார் ஆட்சி அமைக்கப் போகின்றார்கள் என்ற குழப்பமான நிலை விஸ்பரூபமாக உருவெடுத்துள்ளது.இந்நிலையில் மூன்றாம் தரப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இனவாதம் கொண்ட சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வலுவடைந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கையில் மீண்டும் சிறுபான்மை மக்களை சீண்டும் வகையிலான சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

அதன் தொடர்ச்சியாக நேற்று வரையில் நடைபெற்ற சம்பவங்கள் 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக முன்னெடுத்த இனக்கலவரங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. அன்று தமிழர்களை இலக்கு வைத்து தாக்கிய பெரும்பான்மையினத்தவர்கள் இன்று முஸ்லிம்களை தாக்கத் தொடங்கியுள்ளனர்.

கண்டி திகன பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் பெரும் இன வன்முறையாக வெடித்துள்ளது. சிங்கள இளைஞனின் உயிரை பறித்த நான்கு முஸ்லிம் இளைஞர்களால் நாட்டில் அவசர கால பிரகடனம் அமுல்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிலரின் தவறான முடிவுகளால் இன மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறுபான்மையினமான முஸ்லிம்கள் உயிர் அச்சுறுத்தலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதி கிரியை நேற்று மாலை அவிமாலை பிரதேசத்தில் இடம்பெறவிருந்த நிலையில், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. முஸ்லிம் இளைஞர்கள் சிலரினால் தாக்குதலுக்கு உள்ளான சிங்கள இளைஞன் 10 நாட்களின் பின்னர் உயிரிழந்தார். படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் மரணமடைந்திருந்தார்.

இளைஞனின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது வன்முறையாக மாறியிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த இனவாதிகள் அதனை பெரிதுபடுத்தி வன்முறை வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் அம்பாறை விகாரையின் தேரர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் தம்மரத்ன தேரர் உட்பட பிரதேசத்தின் பல தேரர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவம் காரணமாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான 27 வர்த்தக நிலையங்கள், பல வீடுகள், ஒரு பள்ளிவாசல் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த பேரனர்த்தத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞன் ஒருவர் எரிந்த நிலையில் மரணமடைந்துள்ளார். நான்கு இளைஞர்களின் முறையற்ற செயற்பாடு அப்பாவியான இரு உயிர்களை பறிக்க காரணமாக மாறியுள்ளமை துரதிஷ்டமானது.

கடந்த வாரம் அம்பாறையில் இவ்வாறான மோதல் சம்பவம் என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாரிய ஆயுதங்களுடன் நகருக்குள் புகுந்த நூற்றுக்காணக்கான பெரும்பான்மையினர்தவர்கள், தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை உடைத்தும், பள்ளிவாயல்களை தாக்கியும் அட்டகாசம் செய்தனர். எனினும் அரசாங்கத்தின் உயர்மட்ட அழுத்தம் காரணமாக அந்த நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் கண்டியில் வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டிருந்தது.

தொடரும் வன்முறை சம்பவங்களில் முஸ்லிம் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். முஸ்லிம் தலமைகள் மீதான நம்பிக்கை இழந்து அவர்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமது உயிர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் தலைவர் ஒருவர் இல்லை என முஸ்லிம் மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரின் ஆளுமை மற்றும் வீரம் குறித்து முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பிரபாகரன் இன்று இருந்திருந்தால் தமக்கு இவ்வாறான அசம்பாதவிதங்கள் ஏற்பட்டிருக்காது என வெளிப்படையாகவே முஸ்லிம்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த மஹிந்த ஆட்சியின் போதும் பேருவளையில் முஸ்லிம் மக்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது கோடிக்கணக்கான சொத்துக்கள் பெரும்பான்மையினத்தவர்களால் சேதம் விளைவிக்கப்பட்டது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வரும் நிலையில், முஸ்லிம் தலைமைகள் ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கையில் இவ்வாறான கொடுமைகள் தொடரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளமையினால், பிரபாகரனின் மீள் வருகை அவசியமானது என்பதை தமிழர்கள் மட்டுமல்லாமல் முஸ்லீம் மக்களும் உணரத் தொடங்கி விட்டனர்.

Previous Post

அம்பாறை நற்பிட்டிமுனையில் தமிழ் ,முஸ்லிம்களிடையே கலவரம்

Next Post

நடிகையின் ஆஸ்கர் விருதை திருடியவர் கைது

Next Post

நடிகையின் ஆஸ்கர் விருதை திருடியவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures