பலாலியில் மீளக்குடியமர்ந்த மக்களின் வழிபாட்டுக்கு தேவாலயம் ஒன்றை அமைக்கக் காணி ஒன்றைப் பெற்றுத்தருமாறு அச்சுவேலி பலாலி பங்குத்தந்தை அருட்திரு ஜே.ஜி.ஜெயக்குமார் அடிகளார் வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசீலனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
27 வருடங்களுக்கு முன்னர் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த 150 குடும்பங்கள் அவர்களது சொந்தக் காணியில் அல்லாது வளலாய் தெற்கு பலாலி பகுதியில் உள்ள அரசகாணியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பங்கள் வழிபடுவதற்கு ஒரு தேவாலயம் இன்மையால் வழிபாடுகளில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்தக் குடும்பங்கள் இறைவனை வழிபட அவர்களுக்கு ஒரு தேவாலயம் அமைக்க பொருத்தமான காணி ஒன்றை பெற்றுதந்து அவர்கள் இறைவழிபாட்டை மேற்கொள்ள உதவுமாறு வேண்டுகின்றேன் என அருட்தந்தை ஜே.ஜி ஜெயக்குமார் அடிகளார் தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

