அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளாரா?
அந்த சந்தேகம் காரணமாக நார்வே நோபல் கழகம் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தது.
அதிபருக்காக பொய்யான நியமனம் சமர்ப்பிக்கப்பட்டதாக அதன் நிர்வாகி கூறியுள்ளார். ஆனால் அவர் கூடுதல் விவரங்கள் தரவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் ஜனவரி 31க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இம்மாதத் தொடக்கத்தில் அதிபர் டிரம்பின் பெயர் நியமிக்கப்பட்டதாக ஆஸ்லோவின் The Peace Research Institute கூறியது.
பொய்யானஅடையாளத்தின் கீழ் அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளர் அக்டோபரில் அறிவிக்கப்படுவார்.