அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூக ஒன்றியம் எனும் அமைப்பு விடுத்திருந்த கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது.
அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினதும், அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவினதும் வேண்டுகோளுக்கு இணங்க அழைப்புக் கைவிடப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை இரவு அம்பாறை நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடைகள், வாகனங்கள் சேதப்படுத்தி தீயிடப்பட்டமை அங்குள்ள மக்கள் தாக்கப்பட்டமை போன்ற விடயங்களைக் கண்டித்தே இந்த கடையடைப்பு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.