பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமொன்றின் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பப்புவா நியூகினியா தீவின் போர்கெரா பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென்பதுடன், இது தொடர்பான சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனமொன்று தனது பணியை உடனடியாக நிறுத்தியதுடன், பணியாளர்களையும் வெளியேற்றியது.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொலைத்தொடர்புச் சேவை தடைப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது