காணாமற்போனோர் பணியகத்துக்கு அரசமைப்புச் சபை பரிந்துரைத்த 7 ஆணையாளர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான சாலிய பீரிஸ் ஆணைக்குழுவின் தலைவராகவும், லியனகே, நிமல்கா பெர்னாண்டோ, பாதுகாப்புத் தரப்பின் சார்பில் வான் படையின் சட்டஆலோசகராகச் செயற்படும் மொகான் பி பீரிஸ், மட்டக்களப்பைச் சேர்ந்த ஜயதீபா, ரகீம் முல்லைத்தீவைச் சேர்ந்த வேந்தன் ஆகியோர் அரசமைப்புச் சபையால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
அரசமைப்புச் சபையின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். அதேவேளை, காணாமற்போனோர் பணியகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பு இந்த வாரம் இடம்பெறவுள்ளது.