ஜோன் டி சில்வா கலையரங்கை தனியார் துறைக்கு விற்பனை செய்வதற்கான எவ்வித திட்டமும் இல்லை எனவும், இதனை உடனடியாக நவீனமயப்படுத்தி கலைஞர்களுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கலைஞர்களுக்கு தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதியின் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி பண்டாரநாயக்கவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இக்கலையரங்கத்தை தனியார் துறையினருக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக கலைஞர்களுக்கு மத்தியில் பேசப்பட்டும் வந்தது. இது தொடர்பாக ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.