பொதுத்துறை வங்கிகளில் வேளாண்துறையைவிடத் தொழில் துறையினரின் கடன்களே அதிக அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறை வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளில் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களின் 6லட்சத்து 9ஆயிரத்து 661கோடி ரூபாய் கடன்கள் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் புதுப்பிக்கப் பட்டுள்ளன. அதேகாலக்கட்டத்தில் வேளாண்துறையினரின் கடன் 38 ஆயிரத்து 646கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்துறையினரின் தொகையுடன் வேளாண்துறையினரின் தொகையை ஒப்பிடும்போது பதினைந்தில் ஒருபங்காக உள்ளது. இதே காலக்கட்டத்தில் தொழில்துறையினருக்கு 48ஆயிரத்து, 435கோடி ரூபாய் வராக்கடன் தள்ளுபடி செய்துள்ளனர். வேளாண்துறை யினருக்கு ஏழாயிரத்து 91கோடி ரூபாய்வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதிலும் தொழில்துறையினருக்கான தொகையுடன் வேளாண் துறையினருக்கான தொகையை ஒப்பிடும்போது ஏழில் ஒரு பங்காகவே உள்ளது.