ஐதராபாத்தில் உள்ள வேதிப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெல்டா தொழிற்பேட்டை பகுதியில் வேதிப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் உள்ள வேதிப்பொருள் கிடங்குக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 9 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர். மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.