ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு சற்றுமுன்னர் முடிவடைந்துள்ளது.
இச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினோம்.
இதன்போது உள்ளுராட்சி தேர்தலில் வெளியான பெறுபேறுகள் தொடர்பில் ஆராய்ந்தோம்.
மேலும் தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதில்லை என்பதோடு ஜனாதிக்கு தொடந்து எமது ஆதரவை வழங்குவோம் என தெரிவித்தோம்.
ஒருபோதும் கட்சி தாவும் செயற்பாடுகள் இடம்பெறாது என இந்த சந்திப்பின் போது உறுப்பினர்கள் அழுத்தமாக தெரிவித்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிடம் உள்ள 113 பெரும்பாண்மையை விட அதிகமான பெரும்பாண்மையை நிரூபிக்க எம்மால் முடியும்.
பிரதமரை பதவி நீக்குவது தொடர்பாக கலந்துரையாடவில்லை. எனினும் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை மாற்றம் மற்றும் நாம் எதிர்பார்த்த ஏனைய மாற்றங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.