எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு சஜித் பிரேமதாஸ மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் சிறிகொத்தவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கட்சி தலைமைத்துவம் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால் சஜித் பிரேமதாஸவை கட்சித் தலைவராகவும் நவீன் திஸாநயக்கவை உபத் தலைவராகவும் நியமிக்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் கட்சித் தலைமைத்துவத்தை ஏற்க சஜித் பிரேமதாஸ மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய கிடைத்துள்ளது.
இந்நிலையில் தன்னை கட்சியின் தலைராக நியமிக்குமாறும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட தயாராக இருப்பதாகவும் தயாகமகே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.