உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணப்பெண்ணுடன் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. கான்பூர் அருகே பர்ராஹ் என்ற இடத்தில நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் மணப்பெண்ணுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதற்கு மணப்பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
கைகலப்பை தடுக்க முயன்ற மணமக்களுக்கு அடி விழுந்தது. செல்பி புகைப்படம் எடுக்கும் போது இளைஞர் மணப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மணமேடையில் இருந்து ஓடி வந்த மணமகன் தலைப்பாகையை கழற்றிவிட்டு தாக்குதலை தடுத்தி நிறுத்தினார்.
இதையடுத்து மணமக்களை பாதுகாப்பாக மேடைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.இதனையடுத்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.