ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், முப்படைகளின் பயன்பாட்டுக்காக ரூ.12,280 கோடி மதிப்பில் 7 லட்சத்து 40 ஆயிரம் நவீன ரக துப்பாக்கிகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோல் ரூ.1,819 கோடியில் இலகு ரக எந்திர துப்பாக்கிகள் வாங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. மேலும், ராணுவத்துக்காக ரூ.982 கோடி மதிப்பில் 5,719 ‘ஸ்னீபர்’ ரக துப்பாக்கிகள் வாங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டதற்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.