இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்துப் பன்னாட்டு விசாரணைகளை முன்னெடுப்ப தற்காக ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் குழுவில் அங்கம் வகித்த அஸ்மா ஜஹான்கிர் உயிரிழந்தார்.
பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலரான அஸ்மா தனது 66ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். சட்டத்தரணியான அவர், பாகிஸ்தான் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையகம் ஆகியவற்றின் தலைவராகவும் செயற்பட்டுள் ளார்.
இலங்கை குறித்து ஆராய்வதற்காக நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட குழுவில் தனது பணியை நிறைவுசெய்த பின்னரும், அஸ்மா தொடர்ந்தும் இலங்கையின் நிலமை தொடர்பாகக் கவனம் செலுத்தி வந்ததுடன், போர்க்குற்ற நடவடிக்கைகள் தொடர்பா கப் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு அழைப்பு விடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.