ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
54 வயதுடைய நபர் ஒருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. rue de la Croix-Nivert இல் உள்ள கட்டிடம் ஒன்றின் முற்ற வாயிலில் இந்த சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப்பெற்றதும் சம்பவ இடத்துக்கு SAMU மருத்துவரோடு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த நபர் தற்கொலை செய்ய குறித்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் முன்னதாக அவரது குயிருப்பில் வசிக்கும் ஒரு அகதி குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்ததாகவும், மூன்றாவது தளத்தில் இருவரும் வசித்ததாகவும், தளத்தின் படிக்கட்டில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கீழே விழுவதற்கு முன்னதாகவே உயிரிழந்திருக்கலாம் எனவும், பிரேத பரிசோதனைகளுக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
புகார் அளிக்கப்பட்ட குறித்த அகதியினை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.