உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப் பதில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஒன்று கூடி ஆராயவுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படை யில் வடக்கில் 27 உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டமைப்பு முன்னிலையான ஆசனங்களைப் பெற்றுள்ளபோதும், தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுலவலகத்தில் கலந்துரையாடல் நடத்தவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது