ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்வரும் 2020 வரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
தேர்தல் முடிவுகளின் பின்னர் நேற்று (11) கூடிய அக்கட்சி உயர் மட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், இந்த தீர்மானத்தை ஐக்கி தேசிய முன்னணியின் பங்காளி கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.