Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இந்திய ரசிகர்களின் மனங்களை வென்ற பாகிஸ்தான் வீரர் அப்ரிடி

February 11, 2018
in Sports
0
இந்திய ரசிகர்களின் மனங்களை வென்ற பாகிஸ்தான் வீரர் அப்ரிடி

ரசிகர் ஒருவரை இந்திய தேசியக் கொடியை சரியாகப் பிடிக்க வைத்து, இந்தியர்களின் மனங்களை பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி வென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோர்டிஸ் நகரில் இந்திய வீரர் சேவாக்கின் டைமன்ட் லெவன் அணிக்கும், ஷாஹித் அப்ரிடியின் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான ஐஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. பனி உறைந்த ஏரியில் இந்த கிரிக்கெட் போட்டி நடந்தது.

இந்தப் போட்டியில் சேவாக், அப்ரிடி தவிர்த்து சோயிப் அக்தர், ஜாகீர்கான், கிரேம் ஸ்மித், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ், லசித் மலிங்கா, மகிலா ஜெயவர்த்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியின் இடையே ஏராளமான ரசிகர்கள், ரசிகைகளை இந்திய வீரர்களிடமும், மற்ற ரசிர்களிடமும் ஆட்டோகிராப் வாங்கினர்.

பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க இந்திய ரசிகர்கள் ஆர்வமாக நேற்று இருந்தனர்.

அப்போது, ஒரு ரசிகை அப்ரிடியிடம் அணுகி தங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டுகோள் விடுத்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த அப்ரிடி செல்ஃபிக்கு தயாரானார். அப்போது, அந்த ரசிகை தனது கையில் இந்திய தேசியக் கொடியை சுருட்டிப்பிடித்து வைத்து இருந்தார்.

இதைப் பார்த்த அப்ரிடி அந்த ரசிகையை லேசாக கடிந்து கொண்டார். ”இந்திய தேசியக் கொடியை எப்போதும் மதிப்புடன் வைத்து இருக்க வேண்டும். அதை சுருட்டிப் பிடிக்க கூடாது. தேசியக் கொடியை நேராக விரித்துப் பிடியுங்கள், அதோடு சேர்த்து செல்ஃபி எடுக்கலாம்” என்று அந்த ரசிகையிடம் அப்ரிடி கூறினார். அதன்பின் இந்திய தேசியக் கொடியை அப்ரிடி ஒருபுறம் பிடித்துக்கொண்ட நிலையில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்திய தேசியக் கொடியை அப்ரிடி கையில் பிடித்து செல்ஃபி எடுத்ததை அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டி பாராட்டி ஆரவாரம் செய்தனர்.

பாகிஸ்தான் வீரரான அப்ரிடி இந்திய தேசியக் கொடியை கையில் பிடித்து இருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஷாஹித் அப்ரிடி நிருபர்களிடம் கூறுகையில், ”நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்ப்பதற்கும், தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே நட்புறவை கொண்டு வருவதற்கும் கிரிக்கெட் போட்டி மிகச் சிறந்தது என நம்புகிறேன். பாகிஸ்தான் தவிர்த்து, இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ள ரசிகர்கள் என் மீது மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

Previous Post

தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐசிசி அபராதம்

Next Post

100-வது போட்டியில் சதம் அடித்த தவான்

Next Post

100-வது போட்டியில் சதம் அடித்த தவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures