வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தபால் நிலையங்களில் பெருமளவு பொதுமக்கள் நேற்றுக் காலை கூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வழங்கலை தபால் திணைக்களம் மேற் கொண்டிருந்தது. இருப்பினும் வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்தில் தேங்கியிருந்தன.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அதனை தபால் திணைக்களத்துக்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்தது. பெருமளவான பொதுமக்கள் தபால் திணைக்களத்துக்குச் சென்று நேற்றுத் தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
அதேவேளை, வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் எவரும் வாக்காளர் அட்டை இல்லாவிடினும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது