பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென், விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு சிறுவயதில் யசோதா பென் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால், தற்போது அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். யசோதா பென் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தொடர்ந்து தன்னுடைய சகோதரர் உடன் யசோதா பென் வசித்துவருகிறார். இந்தநிலையில் யசோதா பென் இன்று விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள உறவினர்களைப் பார்த்துவிட்டு இன்று அவர் குஜராத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, கட்டுண்டா என்று இடத்தில் வரும்போது, திடீரென அவர் கார் விபத்துக்குள்ளானது. இதில் யசோதா பென்னுக்கு சிறுகாயம் ஏற்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் சென்ற இனோவா காரின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. இதையடுத்து யசோதா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பார்சோலி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.