காலி – போகஹாகொடப் பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை வளாகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
அங்கு வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த இறப்பர் குவியலில் தீ பரவியதை அடுத்து தீ தொழிற்சாலைக் கடடம் அமைந்துள்ள பகுதிக்கும் தீ பரவியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.