Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இழப்­பீடு கோரி நாங்­கள் போராட்­டம் நடத்­த­வில்லை

February 7, 2018
in News, Politics, Uncategorized, World
0

யாழ்ப்­பா­ணம் வந்­திருந்த ஜனாதிபதி மைத்­திரி காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் தெரி­வித்த கருத்­துக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். ஜனாதிபதியின் கருத்­துக்கு எதி­ராக வடக்­குக் கிழக்­கில் போராட்­டம் நடத்­தப்­ப­டும் என்று தெரி­வித்த அவர்­கள், மைத்­தி­ரி­யின் பிள்­ளை­க­ளின் பெறு­மதி என்ன என்று அவ­ரால் கூற­மு­டி­யுமா? என்­றும் ஆவே­ச­மா­கக் கேள்வி எழுப்­பி­னர்.

வவு­னி­யா­வில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் 348ஆவது நாளாக நேற்­றும் தொடர் போராட்­டம் நடத்­தி­னர். அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே இவ்­வாறு குறிப்­பிட்­ட­னர். அவர்­கள் தெரி­வித்­தா­வது-,

இழப்­பீடு கோரி நாங்­கள் போராட்­டம் நடத்­த­வில்லை என்­ப­தனை ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முத­லில் புரிந்து கொள்­ள­வேண்­டும்.

நாங்­கள் எமது பிள்­ளை­களை, கண­வனை பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­டம் ஒப்­ப­டைத்­துள்ள நிலை­யில் எங்­க­ளு­டைய பிள்­ளை­கள் எங்­கும் இல்லை, இழப்­பீடு பெற்­றுத் தரப்­ப­டும் என்று யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார். அவ­ரது கருத்­துக்­களை நாங்­கள் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றோம்.

இறு­திப் போரின்­போது நாங்­கள் ஓமந்தை இரா­ணு­வச் சோத­னைச்­சா­வ­டி­யில் ஒப்­ப­டைத்த எமது உற­வு­க­ளைத் தேடியே நாங்­கள் போராட்­டம் மேற்­கொண்டு வரு­கின்­றோம். அவர்­க­ளின் பிள்­ளை­கள் காணா­மற்­போ­யி­ருந்­தால் அவர்­க­ளுக்கு இழப்­பீடு பெற்­றுக்­கொ­டுத்­தால் அவர்­கள் வாங்­கு­வார்­களா?

ஆதா­ரங்­க­ளு­டனே இந்த மேடை­யி­லி­ருந்து போராட்­டம் நடத்­து­கின்­றோம். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை விடுலை செய்­யப்­ப­டு­வார்­கள் என்று கடந்த ஒரு­வ­ரு­ட­மா­கத் தெரி­வித்த அரச தலை­வர் நேற்று (நேற்­று­முன்­தி­னம்) அப­படி எவ­ரும் இல்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

இரண்டு வாரங்­க­ளில் எமது பிள்­ளை­களை விடு­தலை செய்­வ­தா­கவே ஜனாதிபதி செய­லா­ளர் எமது வீட்­டுக்கு வந்து தெரி­வித்­தி­ருந்­தார். தனக்கு அரு­கி­லுள்ள பிள்­ளையை விடு­தலை செய்ய முடி­யாத ஜனாதிபதி, காணா­மற்­போன எல்­லோ­ரும் இல்லை என்ற முடி­வுக்கு வந்­து­விட்­டார். நாங்­கள் இழப்­பீடு கேட்டா 348 ஆவது நாளா­கப் போராட்­டம் மேற்­கொண்டு வரு­கின்­றோம்? எங்­க­ளு­டைய பிள்­ளை­கள் எங்­க­ளி­டம் வர­வேண்­டும்.

ஓமந்தை சோத­னைச்­சா­வ­டி­யில் கட­மை­யி­லி­ருந்த இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் விசா­ரணை நடத்­த­வென்று அழைத்­துச் செல்­லப்­பட்­ட­வர்­கள் எங்கே போனார்­கள்? எவ்­வாறு அரச தலை­வர் இல்லை என்று சொல்­ல­மு­டி­யும்?

மைத்­தி­ரி­யு­டன் உள்ள சிறுமி எங்கே?

ஜனாதிபதிடன் காணப்­ப­டு­கின்ற பிள்­ளைக்கு என்ன பதி­லைச் சொல்­லப்­போ­கின்­றார்? இல்லை என்று எவ்­வாறு சொல்ல முடி­யும்?

மைத்­தி­ரி­யின் பிள்­ளை­க­ளின் பெறு­மதி என்ன?

எங்­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்கு ஜனாதிபதி இழப்­பீடு தர­மு­டி­யுமா?. அவ­ருக்­கும் பிள்­ளை­கள் இருக்­கின்­ற­னர். மனை­வி­யும் இருக்­கின்­றார். எமது பிள்­ளை­கள் இல்லை, இழப்­பீடு தரு­கின்­றார்­கள் பெற்­றுக்­கொள்­கி­றீர்­களா என்று ஜனாதிபதி­ன் மனைவி கேட்­பாரா? கேட்­க­மு­டி­யுமா?.
மனை­வி­யின் பதி­லைக் கேட்டு அரச தலை­வர் தெரிந்­து­கொள்­ளட்­டும். பிள்­ளை­யைப் பெற்ற தாய் இழப்­பீடா கேட்­பாள்?. ஜனாதிபதி தனது பிள்­ளை­க­ளுக்கு ஒரு பெறு­மதி சொல்­வாரா?

ஏமாற்­றா­தீர்­கள்

தய­வு­செய்து எங்­க­ளு­டைய பிள்­ளை­களை விடு­தலை செய்­ய­வேண்­டும். நீங்­கள் யாழ்ப்­பா­ணம் சென்­றது தேர்­தல் பரப்­பு­ரைக்கு. ஏன் எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளில் தலை­யி­டு­கின்­றீர்­கள்?. எங்­க­ளு­டைய பிரச்­சி­னையை நாங்­கள் அர­சி­ய­லாக்­க­வில்லை.

உங்­கள் மீது நம்­பிக்கை அற்ற நிலை­யி­லேயே நாங்­கள் வெளி­நா­டு­க­ளி­டம் கேட்­டுக்­கொண்டு இருக்­கின்­றோம். இங்­குள்ள தாய்­மார்­க­ளின் கண்­ணீ­ரைப்­பார்த்து வெளி­நா­டு­கள் உட­ன­டி­யாக வந்து இறங்­க­வேண்­டும். எமது பிரச்­சி­னைக்­குத் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டும். 9 வரு­டங்­க­ளாக ஏமாற்­றி­னீர்­கள், இனி­யும் ஏமாற்­றா­தீர்­கள்.

மகிந்­த­வை­யும் விசா­ரிக்க வேண்­டும்

போர்க் காலத்­தில் கட­மை­யி­லி­ருந்த இரா­ணு­வத்­தி­னரை விசா­ரிக்­க­வேண்­டும். முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பச்­சவை விசா­ரணை செய்ய வேண்­டும். நீங்­க­ளும் மகிந்­த­வின் ஆட்­சிக்­கா­லத்­தில் அமைச்­ச­ராக கட­மை­யாற்­றி­ய­வரே. நீங்­க­ளும் பதி­ல­ளிக்­க­வேண்­டும்.

கடும் அழி­வையே எதிர்­கொள்­வீர்­கள்

ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக எதிர்­வ­ரும் வெள்­ளிக்­கி­ழமை ஆல­யத்­தில் தேங்­காய் உடைத்து வழி­ப­ட­வுள்­ளோம். நீங்­க­ளும் அழி­வு­க­ளைச் சந்­திக்­கும்­போது தான் உங்­க­ளுக்­கும் தெரி­ய­வ­ரும். இந்த விட­யத்­தில் வெளி­நா­டு­கள் அமெ­ரிக்கா ஜரோப்­பிய ஒன்­றி­யம் உட்­பட உட­ன­டி­யா­கத் தலை­யிட வேண்­டும் என்று வலி­ய­றுத்­து­கி­றோம் – என்­ற­னர்.

Previous Post

வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படாத அரசு

Next Post

கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யின் தகமை என்ன : ந.சிறீ­காந்தா.

Next Post

கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யின் தகமை என்ன : ந.சிறீ­காந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures