இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக இலங்கை மத்திய வங்கி புதிய 1000 ரூபா நாணயத்தாள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
குறித்த புதிய நாணயத்தாள் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியினால் நிதி அமைச்சர் மங்கள் சமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாட்டிலுள்ள நான்கு மதங்களும், அந்த மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அடையாளமும் இந்த நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.