கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்ட ஜேர்மன் நாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலிலேயே அவர் மோதுண்டு காயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பெண் கித்துல்எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கும் போதும் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
அவர் ஜேர்மன் நாட்டு பல்கலைக்கழக மாணவி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்