எமது மக்களுடைய விவசாய பண்ணைகளை இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறிருக்கையில், காணிகளை விடுவிப்பது தொடர்பான அரசதலைவரின் கூற்றை எப்படி ஏற்றுக்கொள்வது? அவரது கூற்றை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் – என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு, கிழக்கில் 80 வீதமான காணிகள் இராணுவத்திடம் இருந்து மீட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என அரசதலைவர் அண்மையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது கூறினார். அதை அறிந்ததும் நான் அவருக்கு அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தேன்.
அதில், உங்களுடைய கூற்றில் உண்மை இல்லை. 2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு கிட்டத்தட்ட 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இராணுவத்தின் வசம் இருந்தது. தற்போது 54 ஆயிரம் ஏக்கர் நிலம் இராணுவவசம் உள்ளது.
அப்படியாக இருக்கின்ற காரணத்தினால் எப்படி நீங்கள் 80 வீதமான காணிகளை மக்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள் எனக் கூறமுடியும்? உங்களுடைய கூற்றை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன்.அதில் நான் சில விடையங்களை குறிப்பிட்டிருந்தேன்.