Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பதவியை துறந்து வீதியில் இறங்குவோம் -சுரேஷ்

January 26, 2018
in News, Politics, World
0

பது­ளை­யில் பெண் அதி­பரை மண்­டி­யி­ட­வைத்த ஊவா மாகாண முத­ல­மைச்­சரை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து தூக்­கி­விட்டு, அநீதி இழைக்­கப்­பட்ட அதி­ப­ருக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

அவ்­வாறு இல்­லை­யேல் தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் அர­சி­லி­ருந்து வெளி­யேறி, மக்­க­ளு­டன் இணைந்து வீதி­யில் இறங்கி போரா­டு­வேன் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வடி­வேல் சுரேஷ் தெரி­வித்­தார்.

அமைச்­சர் பழனி திகாம்­ப­ரத்­தின் மலை­நாட்டு புதிய கிரா­மங்­கள், உட்­கட்­ட­மைப்பு மற்­றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போதே அவர் இத­னைக் கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஊவா மாகாண கல்வி அமைச்சை கீரி­யி­ட­மி­ருந்து பிடுங்கி நரி­யி­டம் கொடுத்­துள்­ள­னர். ஊவா மாகாண கல்வி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள செந்­தில் தொண்­ட­மான், அரச ஊழி­ய­ரைத் தாக்­கிய ஒரு­வ­ரா­வார்.அவர் இதற்கு முன்­னர் பாரதி தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­தில் அதி­பரை வெளியே விரட்டி அவ­ரது ஆச­னத்­தில் அமர்ந்­த­வர். அவர் நிய­மிக்­கப்­பட்­ட­வு­டன் மாவட்­டத்­தி­லுள்ள ஆசி­ரி­யர்­கள், அதி­பர்­கள் பத­றி­ய­டித்­துக்­கொண்டு என்­னு­டன் அலை­பே­சி­யில் தொடர்­பு­ கொள்­கின்­ற­னர்.

அரச சேவை­யில் இருந்த தபால் ஊழி­ய­ரைத் தாக்­கிய குற்­றச்­சாட்­டில் செந்­தில் தொண்­ட­மான் மீது வழக்­கொன்று இன்­றும் பண்­டா­ர­வளை நீதி­மன்­றில் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது.இந்­தியா, தமி­ழக அர­சி­யல் நட­வ­டிக்­கை­கள் இங்கு சரி­வ­ராது. இவ்­வ­ளவு பிரச்­சி­னை­கள் நடந்­தும் அவர் அங்கு செல்­ல­வில்லை.

கல்வி அமைச்­சுப் பதவி கிடைத்த பின்­னர்­தான் செந்­தில் தொண்­ட­மான் அந்­தப் பாட­சா­லைக்­குச் சென்­றார்.கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து அதி­பரை மண்­டி­யி­ட­வைத்­து­விட்டு பின்­னர் முத­ல­மைச்­சர் தனது வியா­பார ஊட­க­வி­ய­லா­ளர்­கள் ஊடாக பொய்­யான குரல் பதிவை வழங்கி இந்த விட­யத்தை மூடி மறைத்­து­விட்­டார்.

9ஆம் திக­திக்­குப் பின்­னர்­தான் இந்த விட­யம் சிறிது சிறி­தாக வெளி­யில் வந்­தது. அத்­து­டன், முத­ல­மைச்­ச­ரான சாமர சம்­பத் தச­நா­யக்­க­வும் இதற்கு முன்­னர் ஊவா மாகாண பெண் கணக்­கா­ள­ருக்கு இவ்­வாறு செய்து அதற்கு எதி­ராக ஊழி­யர்­கள் வீதி­யில் இறங்­கி­னர். ஊவா பர­ண­கம பிர­தேச செய­லர் விட­யத்­தி­லும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான ஊழி­யர்­கள் வீதி­யில் இறங்­கி­னார்­கள்.

இந்­தச் சம்­ப­வங்­கள் தமிழ், சிங்­க­ளம், முஸ்­லிம் என்­ப­தற்­கப்­பால், அர­சி­யல்­வா­திக்கு இவ்­வா­றான அதி­கா­ரம் இல்லை. இந்த தமிழ்ப் பெண் செய்த தவறு என்ன? அவர் முத­ல­மைச்­ச­ரி­டம் மண்­டி­யிட்­டதை நிரூ­பிக்க ஊட­கங்­கள், பொலிஸ் என பலர் முன்­னி­லை­யில் அதனை செய்­து­காட்­டும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளார்.

அவ­ரி­டம் 6 மணித்­தி­யா­லங்­க­ளுக்­கும் அதி­க­மாக பொலி­ஸார் விசா­ரணை செய்­துள்­ள­னர். பாதிக்­கப்­பட்­ட­வரை இவ்­வ­ளவு நேரம் விசா­ரித்­தால் குற்­றம் இழைத்­த­வரை 6 நாள்­க­ளா­வது விசா­ரிக்­க­ வேண்­டும். இந்த நாட்­டில் சுதந்­தி­ரக் கல்வி உரி­மைக்கு என்ன நடந்­தது?

எமது சமூ­கம்­தான் எமக்கு முக்­கி­யம். அதற்­காக எதை­யும் விட்­டுக்­கொ­டுக்க நாங்­கள் தயா­ராக இருக்­கின்­றோம். அதற்கு அர­சி­யல்­தான் தடை­யென்­றால், அதி­பர் பவா­னிக்கு நீதி கிடைப்­ப­தற்­காக அர­சி­ய­லி­லி­ருந்து ஒட்­டு­மொத்­த­மாக வில­கி­விட்டு, ஆசி­ரி­யர்­க­ளு­டன் வீதிக்கு இறங்­கத் தயா­ராக இருக்­கின்­றோம் -– என்­றார்.

Previous Post

பெண்­ வேட்­பா­ளர் ஒரு­வர் போலி வாக்­குச் சீட்­டு­டன் கைது

Next Post

மகிந்த, கோத்தாவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை

Next Post

மகிந்த, கோத்தாவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures