ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் நான் நன்றி சொல்கின்றேன் எனவும் ஏனேனில், என்னிடம் கூட்டம் சேர்வதற்கு அவர்களே காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் பொதுக் கூட்டங்களில் தனக்கு அதிகம் ஏசும் போது பொது மக்கள் தனது கூட்டங்களில் கலந்துகொள்வது அதிகரித்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.