ஊவா மாகாணத்தில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத்தாகும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் கல்லூரி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சரை மாற்றியது பொருத்தமான நடவடிக்கை அல்லவென்றும் அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.