எகிப்து அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
எகிப்து நாட்டில் மார்ச் 26, 28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போதைய அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி வெளியிட்டார். இந்த தேர்தலில் தான் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தவறான கொள்கைகளில் இருந்து எகிப்து நாட்டைக் காப்பாற்ற அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சமி அனன் தேர்தலில் நான் போட்டியிட வுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பதிவு ஜன. 29-ந் தேதி வேட்பாளர்கள் பதிவு நிறைவு பெறுகிறது.
மார்ச் மாதம் 26-28 தேதிகளில் நடக்கிற வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெறாவிட்டால், இரண்டாம் சுற்று தேர்தல்,
ஏப்ரல் மாதம் 24-26 தேதிகளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.