மதுபானசாலை உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் கலாசாரத்தை வளரவிட இடமளிக்க மாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மது விற்பனை நிலையங்களுக்கு பெண்களை ஊழியர்களாக சேர்த்தால் என்ன நடக்கும் என்பதை யாருக்கும் விளங்க முடியுமாக இருக்கும். நாட்டிலுள்ள மதுக் கடைகளிலும் கட்டை ஆடை கலாசாரம் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுக் கடை உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டாம் என நான் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன். எமது நாட்டின் சிங்கள கலாசாரத்தை உடைப்பதற்கு இடமளிக்க வேண்டாம். எமது நாட்டிலுள்ள சமயத் தலைவர்கள், சமயத்துக்கான அமைப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எமது நாட்டு மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மதுபான சாலைகள் மக்களின் பிரச்சினையல்ல எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. இன்றைய (15) சகோதர தேசிய ஊடகமொன்றிடம் மேலும் கூறியுள்ளார்.