புது வருடத்துக்காக தரம் 01 மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு இன்று (15) நடைபெறுகின்றது.
கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. இதற்குச் சமாந்தரமாக நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளிலும் தரம் 01 இற்கு புதிய மாணவர்கள் சேர்க்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.