ஹவாயில் பரவிய ஏவுகணை தாக்குதல் தகவலால் பதறிய குடும்பம் ஒன்று தமது குழந்தையை கழிவு நீர் கிடங்கில் பதுக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மாகாணமான ஹவாயில் நேற்று காலை பரவிய ஏவுகணை தாக்குதல் குறுந்தகவலால் கடும் பீதி நிலவியது.
மக்கள் பதறியடித்தபடி பாதுகாப்பான இடங்களை தேடத் துவங்கினர். இதனிடையே குடும்பம் ஒன்று தங்களது குழந்தை ஒன்றை பத்திரப்படுத்துவதற்காக கழிவு நீர் கிடங்கில் இறக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குழந்தையானது கழிவு நீர் கிடங்கில் இறங்க மறுத்து அழுவதையும், அதன் பெற்றோர் வலுக்கட்டாயமாக அந்த கிடங்கில் குழந்தையை திணிப்பதையும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே குறித்த தகவலானது புரளி எனவும், ஊழியர் ஒருவரது தவறினாலே இது நடந்துள்ளது எனவும் நிர்வாகம் விளக்கம் அளித்த பின்னரே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தெரியவந்துள்ளது.