பாக்.கிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவியையும் அமெரிக்க அதிரடியாக நிறுத்தி உள்ளது.
“பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கூறி வந்த பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. ஆனால் நடவடிக்கை எடுக்காமல், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பாதுகாப்பு உதவியையும் அமெரிக்க அரசு நிறுத்தியுள்ளது.இது தொடர்பாக டிரம்ப் அரசு நிர்வாக செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நெளரட் கூறியது, ஆப்கானில் தலிபான்கள், ஹாக்கானி நெட் ஒவர்க் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாக். நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. என இந்த முறை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவி, ராணுவ தளவாட உதவி, அது தொடர்பான அனைத்து நிதியும் நிறுத்தப்படும் என்றார்.