கோஸ்டாரிகாவில் நிகழ்ந்த விமான விபத்தில், 10 அமெரிக்கர்கள் உட்பட, 12 பேர் உயிரிழந்தனர்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான, கோஸ்டாரிகாவில், அமெரிக்க சுற்றுலா பயணியரை ஏற்றிச் சென்ற விமானம், கவுனாகாஸ்ட் பகுதியில் விபத்துக்குள்ளாகி, நொறுங்கி விழுந்தது. இதில், 10 அமெரிக்கர்கள் உட்பட, 12 பேர் பலியாகினர்.
இறந்தவர்களில் ஐந்து பேர், அமெரிக்காவின், நியூயார்க் நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, தெரிய வந்துள்ளது.