அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற கடல் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், பிரித்தானியப் பிரஜைகள் ஐவர் அடங்குவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிட்னியின் வடபகுதியிலுள்ள உணவகமொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த டி.எச்.சி -2 கடல் விமானமொன்று, சிட்னியிலுள்ள கூக்ஸ்புரி (Hawkesbury) ஆற்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை விழுந்துள்ளது.
இதன்போது, விமானி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பிரித்தானியர்கள் ஐவர் அடங்குகின்றனர். இவர்களில் 11 வயதுச் சிறுமியொருவரும் அடங்குவதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.