நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய இம்மனுவல் மக்ரோன், வீடற்றோர் அனைவருக்கும் தங்குமிடம் அமைத்துக்கொடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
ஜனாதிபதியன பின்பு இம்மானுவல் மக்ரோன் வழங்கும் முதல் புதுவருட் வாழ்த்துச் செய்தி இதுவாகும். மக்ரோன் மலர்ந்திருக்கும் புது வருடத்துக்கான் திட்டங்கள் குறித்தும், பணிகள் குறித்தும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். ‘எமது நாட்டில் பல வளர்ச்சித்திட்டங்களை இவ்வருடத்தில் மேற்கொள்ள உள்ளோம். அனைத்து மக்களது ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தொடர்ந்தும் உறுதிப்படுத்த உள்ளோம்!’ என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த புதிய ஆண்டில், வீடற்றோர் அனைவருக்கும் தங்குமிடங்கள் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். கடந்த வருட (2017) ஜூலையில் இம்மானுவல் மக்ரோன் ‘எவரையும் வீதிகளில் தங்க விடுவதில்லை!’ என உறுதியளித்திருந்தார். தற்போது அதற்கான திட்டங்களை மக்ரோன் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.