இலங்கையில் ஏற்பட்டுள்ள உரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸியிடம் தொலைபேசி மூலம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக 41,000 மெட்ரிக் தொன் உரத்தை இலங்கைக்கு அனுப்பிவைக்க பாகிஸ்தான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அவர்களின் கோரிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி விரைவில் 75,000 மெட்ரிக் தொன் வரையான உரத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

