யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் முல்லைத்தீவை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை பலியானார்.
இதன்மூலம், குறித்த வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் பலியானோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அமானஷ்யங்கள் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

