ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள தபாயன் கலாசார மையத்தில் நேற்று, ஆப்கன் மீதான சோவியத் யூனியன் படையெடுப்பின் 38வது நினைவு தின நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, ஐஎஸ் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதில் அங்கிருந்த 40 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தில்தான் ஆப்கன் வாய்ஸ் ஏஜன்சி என்ற செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தங்கள் அலுவலகம் இயங்கும் கட்டிடத்தின் மீது எப்போது வேண்டுமானாலும் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

