இலங்கை தொழிலாளர் ஒருவருக்கு வெளிநாட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொலை குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கிறிஸ்மஸ் தினத்தன்று நபர் ஒருவரை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதுடைய இலங்கையருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் கிறிஸ்மஸ் தினத்தன்று கொலையாளி , அவரது மனைவி, சகோதரர்கள் மற்றும் அவரது நண்பர்களுடன் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையருடன் ஒரே அறையை முன்னர் பகிர்ந்து கொண்ட நபர் குறித்த வீட்டிற்கு வருகைத்தந்துள்ளார். இதன் போது திடீரென இலங்கையர் சமையலறைக்கு சென்று கத்தி ஒன்றை கொண்டு வந்துள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறின் போது இலங்கையர் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். எனினும் 2 நாட்களின் பின்னர் அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டவரிடம் பணம் திருடிமையினால் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் நிலை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை தாக்க வந்த போது அதை தடுத்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற இலங்கையர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எனினும் நேற்றைய தினம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

