யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுபிட்டி பகுதியில் பெண் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுள்ளது.
அதற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பெண் ஒருவரை அச்சுறுத்தி கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய நிலையில் 5 லட்சம் ரூபாய் கப்பம் கோரப்பட்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்ற போது அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பின்னர் பொது மக்கள் கூடியதையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து நேற்றைய தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
35 வயது மதிக்கத்தக்க ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

