கடந்த 3 மாதகாலப் பகுதிக்குள் புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் வருமானம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா, வெயாங்கொட, றாகம ஆகிய ரயில் நிலையங்களிலும் ஹோமாகம, கொட்டாவ, பாதுக்க போன்ற ரயில் நிலையங்களிலும் அதிக வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.