Saturday, August 30, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சம உரிமையில், நபிகள் நாயகம் பெரு வெற்றிபெற்றறுள்ளார்

December 24, 2017
in News, Politics
0

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டும் உரிமைக்காக போராடிக் கொண்டும் இருக்கின்ற வேளையில் நாட்டில் சம உரிமையோடு வாழ்வதற்கு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தொடர்ந்தும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டிற்கான மீலாத் தேசிய விழா நேற்று(23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

யாழ் மண்ணிலே மீலாத் நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. மேன்மையான இந்த விழாவில் நாங்களும் கலந்த கொள்ள சந்தரப்ப்ம் வழங்கிய எல்லோருக்கும் வாழ்ந்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தக் கொள்கின்றோம்.

ஐனநாயக அரசியல் சமூக விழுமியங்கள் மனிதாபிமானம் மனித உரிமைகள் பற்றியெல்லாம் நபிகள் நாயகத்தின் அந்தக் கோட்பாடுகள் இருக்கின்றன. அந்தக் கோட்பாடுகள் எல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்து இஸ்லாம் கிறித்தவ மக்களுக்காக இருக்கலாம். அதனடிப்படையில் தங்களுடைய நாட்டில் தாம் வாழ்கின்ற மண்ணில் சம உரிமை உள்ளவர்களாக மக்கள் வாழ வேண்டுமென்பதில் நபிகள் நாயகம் பெரு வெற்றிபெற்றறுள்ளார்.

இத்தகைய சிறப்புமிக்க நபிகள் நாயகத்தின போதனையை பின்பற்றி மண்ணிலே ஆளுகின்றவர்களாகவும் வாழ்கின்றவர்களாகவும் எத்தனையோ கோடி மக்கள் உலகம் புராகவும் வாழந்து வருகின்றனர். வாழ்க்கையிலையே துன்பப்பட்டவர்கள் அல்லது அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் துன்ப துயரங்களை அனுபவிப்பவர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒன்றுபட்டு அந்த உரிமைக்கபாக போராடுகின்றார்கள் போராடுபவர்களாக இருக்கின்றார்க்ள்.

அந்த வகையிலையே தந்தை செல்வநாயகம் முஸ்லிம் மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறி அவர்களுடைய உரிமையை அங்கீகரித்தவர். அவரது காலத்தில் பல முஸ்லிம் தலைவர்களும் உருவாகியிருக்கின்றார்கள். அந்த வழியில் தலைவராக இருந்த அஸ்ரப் அவர்களை நாங்கள் நினைவு கூருகிறோம்.

அந்தக் காலங்களில் முஸலிம் தலைவர்கள் எம்மோடு இணைந்த செயற்பட்டிருக்கின்றார்கள். யாழில் ஆட்சியில் ஆளுபவர்களாக இருந்திருக்கிறார்கள். தந்தை செல்வா வழிகாட்டிலில் அல்லாவின் போதனையில் செயற்பட்டவராக இருக்கின்ற அஸ்ரப் அவர்களை நாம் மறந்துவிடவில்லை.

இந்த மன்னிலும் தமிழ் மக்களும்இ முஸ்லிம் மக்களும் அனுபவித்து வருகின்ற துன்பங்களுக்கு இந்த நாட்டில் சமமாக மனித உரிமைகளோடு வாழ்வதற்கும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றாக இருக்க வேண்டுமென்ற தேவையும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகளால் உரிமைகளுக்காக போராடுபவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

அத்தகைய உரிமைக்காக போராடுகின்ற தேவை இருப்பதால் மதஇசமூகஇஅரசியல் ரீதியாக ஒன்றாக இணைந்து உழைப்பதற்கு நாங்கள் உறுதி புணவேண்டும். முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றுபட்டவர்களாக ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக வாழ்வோம் என்றார்.

Previous Post

ஜனவரியில் தீவிர பிரச்சாரம் ஆரம்பம்

Next Post

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா..?

Next Post

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures