தங்காலை – மாரகொல்லிய பிரதேசத்தில் கடலில் குளித்த வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரகொல்லிய, கப்புஹேன்வல பிரதேச கடலில் நீராடிக் கொண்டிருந்த போது இந்த வெளிநாட்டுப் பெண் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில், காணப்படட அவரை உயிர்காக்கும் அணியினர் மீட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் அங்கு அந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, 59 வயதான ஜேர்மனிய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.