களுத்துறை மாவட்டத்தில் உள்ள களுத்துறை நகரசபை மற்றும் பேருவளை பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது.
களுத்துறை நகரசபைக்கான வேட்புமனுவை கட்சியின் முதன்மை வேட்பாளரும் அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான எஸ்.எம்.ஹிஷாம் களுத்துறை மாவட்டத்தில் (20) தாக்கல் செய்தார்.
காலை (21) பேருவளை பிரதெச சபைக்கான வேட்புமனுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாக்கல் செய்யவுள்ளது.
இதே வேளை கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மாநகர சபை, அத்தனகல பிரதேச சபை, மஹர பிரதேச சபை மற்றும் களணி பிரதேச சபைகளில் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் (20) செலுத்தினார்.

